கவனிப்பு அட்டைகள் (கேரிங் கார்ட்ஸ்)
ஆரோக்கியமான மனதுக்கான உரையாடல்களை உருவாக்குதல்
நீங்கள் அக்கறையுள்ள ஒருவருடன் கடைசியாக எப்போது சிந்தனையுடன் உரையாடிநீர்கள்?
மன ஆரோக்கியத்தின் மேல் கவனம் கொண்டுள்ள ஒரு சிறிய இலாப நோக்கற்ற அமைப்பாக, ஒருவரின் மன நலனில் சமூக தொடர்பு (அல்லது அதன் பற்றாக்குறை) ஏற்படுத்தக்கூடிய தாக்கத்தை நாங்கள் அங்கீகரிக்கிறோம். இன்றைய பெருந்தொற்றுநோய்க்குப் பிந்தைய உலகில் இது மிகவும் பொருத்தமானது
அதனால்தான் கவனிப்பு அட்டைகளை (கேரிங் கார்ட்ஸ்) உருவாக்கினோம். நாங்கள் அக்கறை கொண்டு பின்தங்கிய சமூகத்துடன் உரையாடலைத் தொடங்க விரும்புகிறோம், பெரும்பாலும் அவர்களுக்கு சில வார்த்தைகள், ஆனால் எண்ணங்கள் அதிகம். அவர்களின் மன ஆரோக்கியம் கடந்த இரண்டு ஆண்டுகளில் பாதிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகம் – நம் மத்தியில் அமைதியாக இருக்கும் நாயகர்கள்.
இந்த கவனிப்பு அட்டைகள் (கேரிங் கார்ட்ஸ்) யாருக்காக?
எங்களின் புலம்பெயர்ந்த சகோதரர்களை மனதில் வைத்து நாங்கள் கவனிப்பு அட்டைகளை (கேரிங் கார்ட்ஸ்) வடிவமைத்துள்ளோம், மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான உங்கள் உரையாடல்களில் நீங்கள் தாராளமாக பயன்படுத்தலாம்.
கேர் (CARE) காட்ட நினைவில் கொள்ளுங்கள்:
C – நம்பகத்தன்மை
ஒருவர் உங்களுடன் பகிர்ந்துள்ளதை, அது தனக்கு/ பிறருக்குத் தீங்கு விளைவிக்கக் கூடாத பட்சத்தில் அதைத் தனிப்பட்டதாக வைத்துக் கொள்ளுங்கள்.
A – விழிப்புணர்வு
ஒவ்வொருவரும் வெவ்வேறு பிரச்சனைகளை அனுபவிக்கிறார்கள் மற்றும் அவற்றைச் சமாளிக்க வெவ்வேறு வழிகள் உள்ளன என்பதை அறிந்து கொள்ளுங்கள்.
R – மரியாதை
மற்ற நபரின் பகிர்வு மற்றும் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், அவர்களுக்கு தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த சூழலை உருவாக்குங்கள்.
E – அனுதாபம்
கவனத்துடன் கேளுங்கள், அனுதாபத்தைக் காட்டுங்கள் மற்றும் பிறரின் கருத்துகளை மதிப்பிடாமல் ஏற்றுக்கொள்ளுங்கள்

கனிவான நினைவூட்டல்!
நன்கு நோக்கமாக இருந்தாலும், மனநலம் குறித்த உரையாடல்களை நடத்துவதற்கு கவனிப்பு அட்டைகளைப் (கேரிங் கார்ட்ஸ்) பயன்படுத்துவது தொழில்முறை ஆலோசனை அல்லது மனநல மதிப்பீடுகளை மாற்றுவதற்காக அல்ல. சந்தேகம் இருந்தால் அல்லது கூடுதல் ஆதரவு தேவைப்பட்டால் தயவுசெய்து நிபுணரின் ஆலோசனையைப் பெறவும்.
நீங்களோ அல்லது உங்கள் நண்பர்களோ புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு உதவியை நாடினால், 3129-5000 (24 மணிநேர சேவை) என்ற எண்ணில் நட்பான ஹெல்த்சர்வ் (HealthServe) குழுவைத் தொடர்பு கொள்ளவும்.
பேச ஆரம்பிப்போம்!
ஒருவருடன் உரையாடலைத் தொடங்க முதல் முறையாக கவனிப்பு அட்டைகளைப் (கேரிங் கார்ட்ஸ்)பயன்படுத்துகிறீர்களா?
- உங்களுக்கு விருப்பமான தலைப்பை கீழே தேர்வு செய்யவும்
- நீங்கள் பேச விரும்பும் அட்டை(களை) தேர்ந்தெடுக்கவும்
- பேச ஆரம்பியுங்கள்!
எங்களை தொடர்பு கொள்ள
நீங்கள் யாரிடமாவது பேச விரும்பும் புலம்பெயர்ந்த தொழிலாளியா?
கீழே உள்ளவற்றில் ஒன்றை நீங்கள் செய்யலாம்:
- எங்கள் 24 மணி நேர உதவி எண்ணை அழைக்க: +65 3129 5000
- இங்கு யாரிடமாவது பேச பதிவு செய்யவும்.

கவனிப்பு அட்டைகளின்(கேரிங் கார்ட்ஸ்) முழு தொகுப்பையும் அணுக விரும்புகிறீர்களா?
மேலே உள்ள கவனிப்பு அட்டைகளைப்(கேரிங் கார்ட்ஸ்) பயன்படுத்தி மகிழ்ந்தீர்களா? அட்டைகளின் அச்சிடப்பட்ட பதிப்பை இங்கே பெறுங்கள்.
தொடர்பு கொள்ளவும்!
தங்களை நாங்கள் தொடர்பு கொள்ள நீங்கள் விரும்பினால், உங்கள் தொடர்பு விவரங்களை சமர்ப்பியுங்கள்!
உங்களிடம் ஏதேனும் கேள்வி இருக்கிறதா?
- நான் இந்த அட்டைகளை புலம்பெயர்ந்த சகோதரர்களுடன் மட்டும் பயன்படுத்தலாமா?
எங்களின் புலம்பெயர்ந்த சகோதரர்களை மனதில் வைத்து நாங்கள் கவனிப்பு அட்டைகளை வடிவமைத்துள்ளோம், மனநலம் மற்றும் நல்வாழ்வு தொடர்பான உங்கள் உரையாடல்களில் நீங்கள் தராளமாக பயன்படுத்தலாம்
- நான் எத்தனை அட்டைகளைப் பயன்படுத்த வேண்டும்?
அது உங்கள் விருப்பம். அதிகமாக அல்லது குறைவாகவும் பயன்படுத்தலாம்!
- அட்டைகளில் உள்ள மையக் கதாபாத்திரங்கள் ஏன் ஆண்களாக இருக்கின்றன?
ஹெல்த்சர்வ் (HealthServe) இவற்றை நாங்கள் சேவை செய்யும் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்திற்காக உருவாக்கியது, அவர்கள் பெரும்பாலும் ஆண்களாக உள்ளனர்.
- நான் பேசும் நபர் மன உளைச்சலுக்கு ஆளாகியிருப்பது தெரிந்தால் நான் என்ன செய்ய வேண்டும்?
தனிநபர் புலம்பெயர்ந்த தொழிலாளியாக இருந்தால், நீங்கள்
1. எங்கள் 24 மணி நேர உதவி எண்ணை அழைக்க: +65 3129 5000
2. இங்கே ஆலோசனைக்கு பதிவு செய்யவும்தனிநபர் புலம்பெயர்ந்த தொழிலாளியாக இல்லாவிட்டால், நீங்கள் தகுந்த உதவியை இங்கே பெறலாம்
- மனநல கோளாறுகள் உள்ள ஒருவரைக் கண்டறிய இந்த அட்டைகளைப் பயன்படுத்தலாமா?
இல்லை, நீங்கள் ஒரு சான்றளிக்கப்பட்ட மனநல நிபுணராக இல்லாவிட்டால், தொழில்முறை மதிப்பீடுகளை மேற்கொள்வதைத் தவிர்க்கவும். தேவைப்பட்டால் சரியான மதிப்பீட்டிற்கு ஒரு நிபுணரை அணுகவும்.
ஒப்புக்கொள் ளுதல்
ஹெல்த்சர்வ் (HealthServe) பின்வரும் பங்களிக்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை அங்கீகரிக்க விரும்புகிறது, அவர்கள் இல்லாமல் இந்த முயற்சி சாத்தியமில்லை. சிங்கப்பூரில் உள்ள எங்கள் புலம்பெயர்ந்த தொழிலாளர் சமூகத்திற்கு சிகிச்சை மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் உங்கள் தாராளமான ஆதரவு மற்றும் தன்னலமற்ற அர்ப்பணிப்புக்கு நன்றி
- எங்கள் கள ஆய்வுகளின் போது எங்கள் புலம்பெயர்ந்த நண்பர்களின் மதிப்புமிக்க பகிர்வுகள், எங்கள் கவனிப்பு அட்டைகளை(கேரிங் கார்ட்ஸ்) மேம்படுத்த உதவியது.
- ஹெல்த்சர்வின் (HealthServe) தன்னார்வுத் தொண்டர்கள் மற்றும் பயிற்சியாளர்கள், எங்கள் மனநலம் மற்றும் ஆலோசனை சேவைகள் குழுவுடன் (Mental Health & Counselling Services team) நெருக்கமான கூட்டாண்மையுடன் இந்தத் திட்டத்தை ஆதரிக்கின்றனர்.
- டாக்டர் சான் லாய் க்வென்(Dr Chan Lai Gwen), மூத்த ஆலோசகர் மனநல மருத்துவர் மற்றும் ஹெல்த்சர்வ் (HealthServe) வாரிய இயக்குனர், இந்த திட்டத்திற்கான வழிகாட்டுனர்
